I would call this a fairly good and successful day! I started it well with the MULTI WALK and took 58 photos, 32 street contacts with 9 disclosures. During the rest of the day I had more than 15 contacts and I remember not using the techniques with at least 6 of them. I have cancelled that with only one individual.
I will keep the post simple with just a .gif file today so that I don't have to edit it extensively. (Due to power cut)
I will keep the post simple with just a .gif file today so that I don't have to edit it extensively. (Due to power cut)
பகாதூரின் பகல்கனவு
அண்மையில் அனைத்து செய்தி ஊடகங்களில் நிறைந்தும், உண்மையில் அனைத்து வகையான தளவாடங்கள் குறைந்தும் உள்ள நாடான நேபாளத்தை சார்ந்த பகாதூர் தான் வேலை செய்து வந்த வேளச்சேரி 100 அடி ரோட்டு வீட்டில் வெளியே வந்து காரை துடைக்கத்த துவங்கினான். பொதுவாகவே இந்திப் படங்களை ஆர்வமாக பார்க்கும் வழக்கம் கொண்ட அவனுக்கு தமிழ் நாட்டில் வேலை செய்வது சற்றுக் கடினமாகத்தான் இருந்தது. இருப்பினும் சகல வசதிகளும் செய்து தந்து சம்பளமும் தந்து இவனை உறவினர் போலவே பார்த்து வந்த முதலாளியையும் அந்தக் குடும்பத்தையும் ஒருவாறு சகித்து வந்தான் பகாதூர். முந்தைய இரவு பெய்த மழையை நினைத்து அதற்குள்ளாக முடிந்து விட்டதே என்ற வருத்தமும் ஒருவாறு மகிழுந்தினை அதுவே சுத்தம் செய்ததை நினைத்து மகிழ்ந்தும் கொண்டிருந்தான் பகாதூர். இந்திப் பாடல் ஏதோ ஒன்றை முணுமுணுத்துக் கொண்டே துடைத்தான். இடையே வந்த ஒருவன் இவனிடம் அதுஇதுவென்று தமிழில் பேசிவிட்டு ஒன்றும் முடியவில்லை என்று இந்தியில் பகாதூரிடம் கேள்விக்கேட்கலானான். பகாதூரும் அதற்கு இணங்க இவனை படம் புடித்து விட்டு சென்றான் வந்தவன். வந்தவன் ஏதோ திறைப்படத்துறையை சார்ந்தவன் என்றும் தன்னைத் தேடி இன்றைய தினம் முடிவதற்குள் மறுபடி வருவான் என்றும் பகல்கனவு கோட்டையொன்றைக் கட்டினான் பகாதூர். இரவு முடிந்தும் வந்தவன் இவனைத் தேடி மறுபடி வராததால் துக்கத்துடன் தூங்க சென்றான் பகாதூர்.

No comments:
Post a Comment