Sunday, 5 July 2015

Day 10 - 04-07-2015

I've been unable to do the blogging due to the editing of my website at www.cheerss.biz. Although it is not a reason to justify my action I would like to know you feedback about that page too.

Of course he is gawking at a girl!

Even My life is a swing!

Sharpness is a Bourgeois concept! ― Henri Cartier-Bresson

Before you continue any further please watch the below video! It is the best advice that I have ever got & I believe that you all should get the same!


Friday, 3 July 2015

Day 09 - 03-07-2015

காத்திருக்க நேரமில்லை... காதலிலே!

"அஅஅ... ஏம்பா... ரெண்டு இட்லி குடேன்..?..." என்று தயக்கத்துடனும் தடுமாற்றத்துடனும்தான் ஐயாச்சாமி ஐயா சென்று கொண்டிருந்த வெயிட்டரிடம் கேட்டார்.

"Sorry Sir. இது Self Service hotel. Token அங்க வாங்கனும்." என்று கல்லாவை நோக்கி கைகாண்பித்து விட்டு சென்றுவிட்டார் வெயிட்டர் மணி.

"சே..."

சேரிப்பா என்று சொல்லுவதற்குள்ளாகவே தண்ணீர் குவளைகளை எடுத்துக்கொண்டு சென்று விட்டார் மணி. மரியாதை தெரியாதவர் ஒன்றுமல்ல ஆனால் அவரின் வேலை தண்ணீரை ஏந்திகளில் நிரப்புவதுதான். இரவு எட்டு மணி என்பது கடையில் கூட்டம் அதிகமாக இருக்கும் தருணம் ஆகும். "இந்திரா கஃபே", வேளச்சேரி தண்டீஸ்வரத்தில் பேருந்து நிறுத்தத்திற்கு அருகாமையில் இருப்பதால்ஆரம்பித்த சிறிது காலத்தில் எல்லாம் அமோக வரவேற்ப்பை பெற்று விட்டது. பன்னாட்டு நிறுவன தொழிலாளிகளும் பல ஊர்களில், மாநிலங்களில் இருந்து வந்து குவிவது வேளச்சேரி போன்ற ஒரு இடத்தில்தான். அடையாறு போல் அருமையான அமைப்பும் அல்லல் பட வைக்கும் வாடகையும் இருக்காது அதே சமயம் மேடவாக்கம் போல் குறைந்த வாடகையும் நிறைந்த அல்லல்களும் இருக்காது. ஒரு நடுத்தர வர்க்கம் வாழ சரியான இடம் ஆதலால் அப்படித்தான் கூட்டமும் வழியும். எவருக்கும் எவருடனும் நின்று பேச நேரமிராது.

மேசையின் மீது தான் வைத்த கைப்பையை எடுத்த ஐயாச்சாமி ஐயாவின் வலது கை நடுங்கிற்று. அந்த நடுக்கங்களுக்கு நடுவே அந்தப் பையை 2 நிமிட போராட்டங்களுக்குப் பிறகு ஒருவாறாக எடுத்துவிட்டார் ஐயாச்சாமி. உண்மையில் அந்த 2 நிமிடங்களுக்குள் அவரது கைக்கும் பைக்கும் ஏற்பட்ட போராட்த்தைவிட அவரது மனதுக்கும் காலத்துக்கும் ஏற்பட்ட போராட்டமே பெரியதாகும். புதுக்கோட்டையை அடுத்துவுள்ள அன்னவாசலின் அருகே இன்னும் பல மனிதர்கள் ஐயாச்சாமியின் பெயரைக்கேட்டாலே நடுங்குவார்கள். ஆசிரியர் ஐயாச்சாமி என்றால் சில மாணவர்கள் வாயைக்கூட திறக்க அஞ்சுவார்கள். இன்று கிண்ணங்களை எடுக்க நடுக்கத்துடன் தள்ளாடும் அவரின் கைகள் அன்று வெடுக்கென்று பாய்ந்துவிடும், மாணவர்களின் கன்னங்கள் மீது. கைப்பையை எடுத்துக்கொண்டு கவுண்டரை (சாதிகள் இல்லையடி பாப்பா...) வந்தடைந்தார். ரெண்டு இட்லி, ஒரு காஃபியென கராராக சொன்னார் ஐயா.


"முப்பது ரூபாய் சார்" என்றார் அச்"சீட்டு"க்கருவியில் இருந்து டோக்கனை கிழித்தபடியே கவுண்டரில் இருந்த சரவணன். சரவணன் 2008 ஆம் ஆண்டு பொறியியல் முடித்த எண்ணற்ற பட்டதாரிகளில் ஒருவர். எங்கோ இருந்த வங்கிகள் மூடப்பட்டதால், எவருக்கோ எவரோ கொடுக்க வேண்டிய பணம் வராததால், ஏதோவொரு அலுவலகம் மூடப்படதால், பாவம்! வேலை கிடைத்துவிட்டது என்று கல்லூரியை விட்டு நம்பிக்கையுடன் வந்த சரவணனுக்கு கடைசிவரை வந்து சேர்ந்து கொள்ளுங்கள் என்ற அழைப்பு மட்டும் வந்து சேரவேயில்லை. "இஞ்சினீயரிங் படிச்சு என்னத்தை கிழிச்ச, நீ?" என்று அப்பா கேட்டதால் வந்துவிட்டார் அவரும்... டோக்கணை கிழிக்க!


Add caption


"சார், சில்லறையா குடுங்களேன்..." என்றார் சரவணன், ஐயாச்சாமி நீட்டிய ஐம்பது ரூபாய் நோட்டுக்கு பதிலாக. சில்லறை கொடுக்க வேண்டுமென்று தெரியாமல் இல்லை ஆசிரியர் ஐயாவிற்கு இருப்பினும் அந்த தள்ளாத வயசில் நில்லாத நடுக்கத்தினூடே மூன்று பத்து ரூபாய் நோட்டுகளை சரியாக எண்ணி எடுப்பது எவ்வளவு கடினம் என்று அவருக்குத்தான் தெரியும். ஆகையால் அவர் எடுக்கவில்லை. பிறகு மெதுவாக மூன்று நோட்டுகளை இடதுகையால் எடுத்துக்கொடுத்தார் ஐயா, இரண்டொரு நோட்டுகளை கீழே தவறவிட்ட படியே. டோக்கன் சீட்டையும் தனது ரூபாய் நோட்டையும் எடுத்துக் கொண்ட ஐயா பிறகு மெதுவாக சென்று கவுண்டரில் இருந்த வரிசையில் வந்து நின்றார். அவர் கேட்ட இரண்டு இட்லிகளும், புதினா மற்றும் தேங்காய் சட்னிகளும் சாம்பாருடன் தட்டில் கொடுக்கப்பட்டது. 

மஞ்சள்தட்டில் வெள்ளை இட்லிகளும், பச்சை வெள்ளையென இரண்டு சட்னிகளும். மென்சிவப்பு நிறத்திலிருந்த சாம்பாரும் பார்ப்பதற்கு அருமையாகவே இருந்தது. பார்ப்பவரை உடனே உண்ணத்தூண்டும் வகையில்தான் இருந்தன அவை. ஏனோ ஐயாவிற்கு மட்டும் அதை பார்த்ததும் உண்ணத்தோணவில்லை. காலம் சென்ற கமலத்தின் நினைவுதான் வந்தது. கமலம் அம்மாளும் ஐயாச்சாமியும் காதல் மனம் முடித்தவர்கள். 1949ல் திருச்சியில் நடந்த அவர்களின் சுயமரியாதை திருமணம்.  குடும்ப நண்பரான கமலத்தின் தந்தையின் வீட்டில் இருந்துதான் இருபது வயதான ஐயா, அப்பொழுது புனித வளனார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் பெரியாரின் சிந்தனைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்ட ஐயாச்சாமியைத்தான் மணம் முடிப்பேன் என்று மொட்டைமாடியில் இருந்து கமலம் கத்தியது எல்லாம் வேறுகதை! 60 வருட காதல் வாழ்க்கைக்குப் பிறகு  கமலம் ஐயாச்சாமியை தனியாக விட்டுவிட்டு சென்றாள். கடந்த 5 வருடங்களாக எப்பொழுது இதுபோன்ற நல்ல இட்லிகளை கண்டாலும் ஐயாச்சாமிக்கு கண்களில் கண்ணீர் மல்கிவிடும், கமலத்திற்கு பிடித்த இட்லிகள் என்று. அவரின் உள்ள நடுக்கத்தால் கண்களில் இருந்து காதல் நீர் சொட்டியது உடல் நடுக்கத்தால் தட்டிலிருந்த சாம்பார் கொட்டியது. இருக்கையில் வந்தமர்ந்தவர் மேலும் சுற்றிமுற்றிப் பார்த்துவிட்டு இட்லியை எடுக்கலானார். ஒரு துண்டு இட்லியை கமலத்திற்கென ஒதுக்கி வைத்தார். சினிமாத்தனமாகவும் முட்டாள்தனமாகவும் தோன்றும் அவரின் செயல்களைக் கண்டால். ஆனால் 60 வருடமாக ஒன்றாகவே உண்டு வந்த அவருக்கு அது அவரின் பழக்கமாகிவிட்டது. மணம் முடித்த சிறுது காலத்தில் தனிக்குடித்தனம் சென்றார்கள் வேலையின் காரணமாக. பள்ளிப்படிப்பு மட்டுமே முட்த்து 17 வயதே ஆன கமலத்திற்கு நன்றாக சமைக்கவும் வராது வீட்டு வேலைகளும் செய்ய வராது. இருவரும் சேர்ந்துதான் அனைத்தையும் செய்வார்கள். ஐயாச்சாமி தனது ஆசிரியர் பணியை சமையலறையிலும் செவ்வென செய்வார். பாத்திரங்கள் கழுவ சோம்பல் பட்டுக்கொண்டு ஒரே தட்டில் ஒன்றாக உண்பார்கள் கமலமும் ஐயாச்சாமியும். தாயைப் போல் கமலம் அவரை பார்த்துக்கொண்டாளோ என்னவோ அதைப்பற்றியெல்லாம் ஐயாச்சாமி நினைத்ததேயில்லை. ஆனால் தினமும் கமலம் தனது தந்தையைவிட ஐயாச்சாமி தன்னை நன்றாக பார்த்துக்கொள்வதாக கூறுவாள். 



இட்லியை அசைபோடுவது போல் பார்ப்பவர்களுக்கு தெரிந்தாலும் ஐயாச்சாமிக்கு மட்டும்தான் தெரியும் அவர் அசைபோடுவது எல்லாம் முடிந்த காலத்தைப்பற்றியே என்று. இட்லியை மென்று தின்றுவிட்டு மெதுவாக எழுந்த ஐயாச்சாமி கைகழுவும் இடத்தைநோக்கி நடந்தார். தன்னை முந்திக்கொண்டு ஒரு சிறுமி சென்று கையைக் கழுவினால். அக்குழந்தையில் கமலத்தையே கண்ட ஐயா நிம்மதியடைந்தார். கைகளைக் கழுவி விட்டு வந்து காஃபி கவுண்டரில் சீட்டைக் கொடுத்து காஃபியை வாங்கினார். இவரின் வயதையும் நடுக்கத்தையும் கண்ட அன்ஷு குப்தா டம்ளரில் அளவாகவும் டவராவில் அதிகமாகவும் காஃபியைக் கொடுத்தார். ஒரு சிறு புன்னகையை அன்ஷுவிற்கு அன்பளித்துவிட்டு வந்து அமர்ந்தார் ஐயா. நடுக்கத்துடனே காஃபியைக் குடித்துவிட்டு ஒரு நிமிடம் பெருமூச்சு விட்டார் ஐயா. அதன் அர்த்தம் அவரே அறிவார். பிறகு மெதுவாக எழுந்து தன் கைப்பையை எடுத்துக்கொண்டு நடக்கத்துவங்கிய ஐயாவிற்கு அப்பொழுதுதான் தோன்றியது இது அன்னவாசல் அல்லவென்றும் தன் மகன் வசிக்கும் சென்னையில் தன் உடமைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டுமென்றும். அப்படி நினைத்த மறுகணம் அவரின் இதழோரத்தில் ஒரு ஏளனப்புன்னகை வந்து சென்றது. உன் உயிரே சென்றபின் உன் உடமைகள் உனக்கெதற்கு என்று அவரின் மனசாட்சி செய்த ஏளனம்தான் அது. 

அக்கடையின் படியைவிட்டு கீழே இறங்குவதை விட துணையில்லா வாழ்வை நடத்துவது அவருக்குக் கடினமாக இருந்தது. ரோட்டின் ஓரம் நேராக சென்றாலும் அவரின் மனம் மட்டும் 60 வருடங்களில் எங்கோ ஒரு இடத்திற்கு தவ்வி தவ்வி சென்று கொண்டேயிருந்தது. வேளச்சேரியன் குறுகிய சாலையில் நடப்பவர்களை இருப்பதாகவே மதிக்காத ஆட்டோவொன்றில் இருந்து "யோ... பெரிசு போய் சேந்திராத. பாத்துப்போ" என்று சத்தம் மட்டும் வந்தது. இனியெங்கு நடப்பதென்று தெரியாத ஐயாச்சாமியின் மனசாட்சி சொல்லியது "அதுக்குத்தான் காத்துகிட்டு இருக்கேன்பா..."


Wednesday, 1 July 2015

Day 08 - 01-07-2015

Today was a fairly successful day! Not many photographs but I had 10+ contacts. I agree that it is too few a number but given the fact that I went out only for a period of 1 hour to pick my spectacles from the Lenskart shop, I am happy with what I did.

Day 06 - 29-062015

I was unable to post things as the power supply played Hide & Seek with me as a result I didn't have a Good Day. In short it was a 50-50 day which Krack-Jacked my routine!

Sunday, 28 June 2015

Day 05 - 28-06-2015

Today started with a rain, ended with a rain & all the time in between them was also covered by the rain.
I made the least Street contacts today with only a handful of contacts. I had to cut short my evening plan of making a 100 contacts as I had to engage a friend visited after a long time!  The only contacts that I made were in Park and they belong to the most dreaded group. THE KIDS.
I've always been afraid of kids for two reasons.
1) They don't fear for the societal norms and they are the ones that can easily mock you.
2) They don't hide what they think. They speak their mind out!

i No power supply & no way to upload other pictures! 

Saturday, 27 June 2015

Day 04 - 27-06-2015

Today 27-04-2015 was a shocking day as even I was surprised that I am continuing it beyond the DAY 03! A couple of Guitar classes, one in Thiruchchirapalli & the other in Chennai, Badminton sessions with Ankit in Rae Bareily, Walking in Dindigul and again a gym sessions with Chandra in Chennai all ended on Day 03!

I woke up early and went out to walk by 06:15. Something happened and I was bit by the usual bug and I refrained from focussing on the faces of people. As of ever I was intrigued by Machines, Animal/Birds/Plants and foods. Now, while looking back at the day I find very less humans in the pictures that I shot. First one to be shot by me was a Royal Enfield and then it was Kingfisher!

A traveller's Best Friend!
This reminded me, it is time to get a new lens kit!


Soon I met a hard working guy who was loading the water cans! He obliged when I asked him if I could take his photo. Then I met some badminton players and Karate kids in the park. 


Again I was intrigued by the happy nap of a carefree dog on the road! After all, who wouldn't like to have a happy sleep sans any disturbances (although not in the middle of the road) on a nice Saturday morning?! That is something we all aspire to. To live like the dog!


I was lucky enough to get a shot of myself taken by a fellow walker!



The only guy who uses the Foot-over bridge in Baby Nagar!





It is a balanced diet!
And then I found about health with the guy who runs up and down the flyover and about the balanced diet in the form of Potato, Tomato, Onion, greens and Cabbage!



















Of course the lord saviour is everywhere, visible even to the naked eye of an Atheist!


A sumptuous tea is what every one needs in the morning!




Again the evening was there with a lot of contacts and a lot more of food again!

Poori

Paani

Dahi Poori

This photo, almost landed me a Food Photography assignment!



Friday, 26 June 2015

Day 03 - 26-06-2015

I woke up at 05:15 and after a minute it miraculously became 05:40!
Wait! It is not over. As I just blinked for a second and when I saw the time it was already 07:30!
;-)
Boy, Time flies in Chennai, Don't you agree?
:-P

But I made the Multi-Walk at 12:00 - 13:00 in the scorching Chennai Sun, more like a  punishment for the mistake of time which flew so fast in the morning. Unlike the early morning, the time inched slowly in the afternoon! I was able to make 18 contacts altogether in the afternoon but no photographs. In the late evening I got 12 contacts with 2 disclosures. I made two cancellations and I found myself stuttering on the words starting with D & I.


தமிழறிந்த உங்களுக்கு யார் நீ யிலிருந்து - பொன்மேனி தழுவாமல்!

For those of who are not capable of reading Thamizh, I have the Hindi version of the same song. The evergreen Lag jaa gale!


I have neither seen the Thamizh version nor the Hindi but I have first heard the Hindi rendition of the same song by my ICICI Fellow Divya Sivaramakrishnan. I, immediately fell in love with the song regardless of understanding the song only in bits and pieces. I hope you will enjoy both the version regardless of your language preference. 

The evening went well, well relatively speaking! ;-)

I ate Chicken 65 in the shop and I was lucky enough to get his photo. Not a clear focus and definitely not the best angle that could have been used nevertheless it is a shot!
The Best tasting Chicken in the whole of Velachery is from his shop!

" தினம் ஒரு திட்டு"
"அப்பா... அப்பா... அப்ப்ப்பா..." என்று நச்சரித்த ஏஞ்சலினை மெதுவாக பாரத்தான் பிரபாகரன். தான் ருசித்துக் கொண்டிருந்த சிக்கன் 65யை விட்டு பிரிய மனமில்லாத அவன் உதடுகள் உதிர்த்தன வார்த்தைகளை -  "என்னம்மா..?"

"அப்பா அவுங்க ஏம்பா பிச்சை எடுக்குறாங்க..?" என்று கேட்டாள் அருகே நின்று கொண்டிருந்த கிழவியை சுட்டிக்காட்டி. மாதத்தில் என்றாவது ஓரிரு நாட்கள் மட்டுமே சிக்கனை ருசிக்கும் பிரபாகரனுக்கு அக்கணமே தெரிந்துவிட்டது, அவனின் இன்றைய விருந்து முடிந்ததென்று. மின்னல் வேகத்தில் யோசித்த அவனின் மூளை ஒரு முடிவுக்கு வந்தது. ஏஞ்சலினிடம் ஏதாவது ஒன்று சொல்லி ஏமாத்த நினைத்தால் அவள் ஆயிரம் கேள்விகள் கேட்பாள். விளைவு வில்லங்கமாக போய்விடும். சிக்கனுக்கு வந்த அம்பு இரவு தூக்கத்தையும் சின்னாபின்னம் ஆக்கி விடும் என்று உணர்ந்த அவன் கேள்வியையே மாற்ற வைக்க வேண்டும் என்று - "If you can't convince them, confuse them" என்ற ஆயுதத்தை எடுத்தான். "அவுங்க பிச்சை எடுக்கலைமா... கடன் வாங்குறாங்க, அவ்வளவுதான்" என்றான்!

ஆயிரம் கேள்விகளை பட்டியல் போட்டு வைத்திருந்த ஏஞ்சலினுக்கு அந்த பதில் ஆச்சர்யமாக இருந்தது. அப்பாவிடம் கேட்க வேண்டும் என்று அவள் நினைத்திருந்த கேள்விகளெல்லாம் இப்போது கேட்க முடியாமல் போகவே அவள் யோசிக்கலானாள். அந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திய பிரபா நருக்-முறுக்கென கடிக்கலானான் - எலும்போடு இருந்த இறைச்சியை. வேளச்சேரியில் எத்தனையோ கடைகளிருந்து பிரபாவுக்கு பிடத்த கடை நம்ம பஷீர் அண்ணன் கடைதான். பஷீர் பாயின் கைமணம், கை வண்ணம் ஒரு அலாதியான சுவைதான். பொறிச்சகோழியின் மீது அவர் தூவும் மிளகாய், சாட் மசாலா, உப்பு கலந்த தூள்தான் அவரின் இரகசியம். இதைவிட பலமடங்கு விலை அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை என்று மகளை கே.எஃப்.சி. யில் சிக்கன் ருசிக்க வைத்த பிரபாகரனுக்கு இந்த சிக்கனின் மீது ஒரு அளப்பரிய ஆவல். ஏஞ்சலினிக்கு மிகவும் பிடித்தது இதுதான் இருப்பினும் கலாச்சார காரணங்களுக்காக கே.எஃப்.சி பிடித்தாற்போல் காட்டி கொள்வாள். அதனாலேயே பஷீர் பாய் சிக்கன் கொஞ்சமாக போதுமென்பாள். கொஞ்சமாக போதுமென்றால், கொஞ்சமாக உனக்கு போதுமப்பா என்று பொருள்.

"அப்போ... அவுங்க எப்பப்பா காசைத் திருப்பி தருவாங்க" என்றாள். இடையில் இருந்த நேரத்தில் இடைவிடாமல் இறைச்சியை கொரித்த பிரபா கூறலானான், "தருவாங்கம்மா" என்றான் மெதுவாக விழுங்கியபடியே.

"அதான் எப்போ...?"

"ஹம்ம்ம்... அவுங்களுக்கு காசு வந்ததும்."

"அவுங்களுக்கு எப்பப்பா காசு வரும்..?"

தான் எதிர்பாராத ஆபத்தான பக்கமாக உரையாடல் செல்வதை கவனித்து சுதாரித்தவனாய் "அட... அவுங்க நம்ம கிட்டேயே கடனை திருப்பி தர மாட்டாங்கம்மா... வேற ஒருத்தவங்ககிட்ட நம்மகிட்ட வாங்குன கடனை திருப்பி தருவாங்க" என்றான்.

"அப்போ நம்ம அவுங்களுக்கு இப்போ கடன் தரப்போறோமாப்பா...?"

"அட நாராயணா... என்னை ஏன் இந்த மாதிரி இக்கட்டான சூழ்நிலைலை தள்ளி விடுற"னு இல்லாத கடவுளைப் பாத்து கேட்க ஆரம்பித்தான், பதில் சொல்லாது தவித்த பிரபாகரன்.


" சொல்லுங்கப்பா... நம்ம அவுங்களுக்கு இப்போ கடன் தரப்போறோமா..?"

மகரப்பிடியிலிருந்து கஜேந்திரனை காக்க வந்த பரந்தாமனாய், மகளின் பிடியிலிருந்து பிரபாகரனை காக்க வந்தது மேரியின் கைபேசி அழைப்பு .

பயம் கலந்த நிம்மதியுடன் அழைப்பை ஏற்று பிரபா வாய் திறந்தான் "ஹல்" என்று. அதற்குள்ளாக "என்ன செஞ்சுகிட்டு இருக்கீங்க, அப்பனும் மகளும் இன்னும்? அவளுக்கு செல்லம் குடுக்காதீங்க குடுக்காதீங்கனு சொல்லுறேன்! கேக்குறீங்களா நீங்க? எல்லாம் நீங்க கொடுக்குற இடம்தான். இப்பவே உங்களை மாதிரி வாய் மூடாம பேசிகிட்டே இருக்கா. அவ பேசுறதைக் கேட்டு கேட்டு எனக்கு காது வலியே வந்திடுது! என்ன பதிலே பேசாம இருக்கீங்க வாயில என்ன கொலுக்கட்டையா இருக்கு..? உங்களைத்தான்" என்றாள்.

எலியூருக்கு பயந்து புலியூருக்கு போன பரதேசியாய் பேசுவதறியாது விழித்தான் பிரபாகரன். "இந்தா வரேம்மா... நம்ம பஷீர் அண்ணன் கடையில பாப்பாவும் நானும் சிக்..." என்று முடிப்பதற்குள் "என்னது ! அந்த ரோட்டுக்கடையிலையா..? கருமம் கருமம். அது நல்லாவா இருக்கும். சாக்கடை பக்கத்துல கடை இருக்குமே. அவன் எந்த தண்ணீல போடுவானோ.. கெட்டுப் போன சிக்கனதான் போடுவானுக. உங்ககிட்ட எத்தனை தடவை சொல்லுறது கே.எஃப்.சியில மட்டும் அவளுக்கு சிக்கன் வாங்கி கொடுங்கனு. போன ஜனவரியில காய்ச்சல் வந்து 4 நாள் அவளுக்கு உடம்பு சரியே ஆகலை. ஸ்கூலுக்கும் போகலை. நீங்க ஏன் இப்படி சொல்லுற பேச்சையே கேக்க மாட்டேங்குறீங்க?  எல்லாம் உங்கம்மா புத்தி அப்படியே வருது. மத்தவங்க பேசுறதே கேக்குறதே இல்லை நீங்க பாட்டுக்கு பேசிகிட்டே இருப்பீங்க. உங்க  இஷ்டத்துக்கே எல்லாம் நடக்கனும்" என்று அடுக்கிக் கொண்டே போனாள். இடைமறித்த பிரபா... "இந்தா ஒரு நிமிஷம் இரும்மா நான் கூப்பிடுறேன்" என்று அழைப்பை துண்டித்து விட்டு காசைக் கொடுத்து விட்டு, தனது Bajaj Platina வில் வீட்டுக்கு வந்து சேர்ந்தான், ஏஞ்சலினுடன். வீட்டில் வந்து அமர்ந்ததும் அர்ச்சனை விழுந்து கொண்டிருந்தது பிரபாவுக்கு. செய்தி கேட்கலாமென்று டீ.வி. சேனலை மாற்றிய போது "மேகியை அடுத்து கே.எஃப்.சிக்கும் நெருக்கடி. சிக்கனில் நச்சுப் பொருட்கள் இருப்பதாக முதற்கட்ட ஆய்வு தகவல்" என்று ஒலித்தது.



 Anyway I took photos of one Maneshwar from Nepal, who is the watchman of "Pizza Empire". I also stopped near the A1 Briyani Centre to take pictures of two youngsters enjoying the time!
















Tomorrow I am hoping to take more pictures and make more contacts!

110.